/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 25, 26ல் நந்தம்பாக்கத்தில் தொழில் முனைவோர் கண்காட்சி
/
வரும் 25, 26ல் நந்தம்பாக்கத்தில் தொழில் முனைவோர் கண்காட்சி
வரும் 25, 26ல் நந்தம்பாக்கத்தில் தொழில் முனைவோர் கண்காட்சி
வரும் 25, 26ல் நந்தம்பாக்கத்தில் தொழில் முனைவோர் கண்காட்சி
ADDED : ஜன 18, 2025 12:23 AM
சென்னை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், 'டி.என்., - பீட் எக்ஸ்போ - 2025' எனும் தொழில் முனைவோர் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, வரும் 25, 26ம் தேதிகளில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்க உள்ளது.
இது குறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொழில் முனைவோர் சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, கடந்தாண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், நடப்பாண்டில் இரு நாட்கள் நடத்துகிறோம். கடந்தாண்டு 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. தற்போது 500க்கும் மேற்பட்ட அரங்குகளுடன், 15,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளோம்.
கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் மாணவர்கள் என, பலரும் பங்கேற்பர்.
இதன் வாயிலாக, புதிய தொழில் துவங்குவதற்கான வாய்ப்பை பெறுவதுடன், முன்னணி நிறுவனங்களில் இருந்து நேரடி கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பையும் தொழில் முனைவோரால் பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.