/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.பி., காலனி சாலை சீரமைப்பு பணி தொடர்ந்து 'அல்வா' கொடுக்கும் நகராட்சி
/
இ.பி., காலனி சாலை சீரமைப்பு பணி தொடர்ந்து 'அல்வா' கொடுக்கும் நகராட்சி
இ.பி., காலனி சாலை சீரமைப்பு பணி தொடர்ந்து 'அல்வா' கொடுக்கும் நகராட்சி
இ.பி., காலனி சாலை சீரமைப்பு பணி தொடர்ந்து 'அல்வா' கொடுக்கும் நகராட்சி
ADDED : அக் 24, 2024 12:17 AM

திருநின்றவூர், திருநின்றவூர் நகராட்சி ஒன்றாவது வார்டில் இ.பி., காலனி, பெரியார் நகர் சுரங்கப்பாதை அருகே, 100 மீட்டர் நீளத்தில் சிமென்ட் சாலை உள்ளது.
இந்த சாலையை, பெரியார் நகர், முத்தமிழ் நகர், திருவேங்கடம் நகர், சுதேசி நகர், கன்னிகாபுரம், ராமதாஸ்புரம், கோமதிபுரம் உள்ளிட்ட பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2008ல் போடப்பட்ட இ.பி., காலனி சாலை, மழையால் சேதமடைந்து ஓராண்டாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கினர்.
பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஜூலை மாதம் அவ்வழியாக சென்ற கர்ப்பிணி ஒருவர், பள்ளத்தில் தவறி விழுந்து வலிப்பு ஏற்பட்டது.
அவரை பகுதிவாசிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, இ.பி., காலனி சாலையை சீரமைக்க வலியுறுத்தி, நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, கடந்த ஜூலை 25ல் பகுதிவாசிகள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் உள்ள குப்பையை அப்புறப்படுத்தி, ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொருட்களால், சேதமடைந்த சாலையை பெண்களே சீரமைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தினர், பெண்களிடம் பேச்சு நடத்தி, 15 நாட்களுக்குள் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்தனர்.
அதன்படி, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையை சீரமைக்க டெண்டர் கோரப்பட்டு, பின் நிறுத்திவைக்கப்பட்டது.
இரண்டு மாதமாக கிடப்பில் உள்ள சாலை பணியை, மழைக்கு முன் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

