தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை 23,578 பேருக்கு பரிசோதனை
தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை 23,578 பேருக்கு பரிசோதனை
UPDATED : அக் 21, 2026 09:29 PM
ADDED : அக் 21, 2026 09:24 PM
சென்னை: சென்னையில், 698 மருத்துவ முகாம்கள் வாயிலாக, 23,578 பேருக்கு தொற்று நோய் தடுப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
மாநகராட்சியின் பொது பொது சுகாதாரத்துறை வாயிலாக, மழைக்கால தொற்றுநோய் கட்டுப்படுத்த, தினசரி, 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்கள், குடிசை பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒரு வாரத்தில், 698 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 23,578 பேருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் தினசரி, 3,000 பேர் பயனடைந்து வருகின்றனர்.
அத்துடன், தொற்றுநோய் பரவாமல் தடுக்க, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு குறித்து, சுகாதார ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர். தொற்று நோய் கண்டறியப்படும் இடங்களில், பிளிச்சிங் பவுடர்கள் எனம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதற்காக, 150 டன் அளவில் பிளிச்சிங் பவுடர் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய் தொற்று கள ஆய்வு மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
