ADDED : பிப் 20, 2024 12:50 AM

அ நிறம் | அளவு
சென்னை, சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் குதிரைப்படை வளாகத்தில், முதல் முறையாக குதிரையேற்றப் போட்டி இன்று துவங்குகிறது.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் கூறியதாவது:
சென்னையில் முதல் முறையாக குதிரையேற்றப்போட்டி, இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கின்றன. விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி குதிரையேற்ற போட்டியை துவக்கி வைப்பதுடன், குதிரையேற்ற பயிற்சி பள்ளியையும் திறந்து வைக்கிறார்.
குதிரையேற்றப் போட்டியில் காவல் துறை அணிகள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் உட்பட 46 குதிரைகளுடன் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
