/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பால ரயில் சேவை 'மெட்ரோ'வுடன் இணைந்தாலும் ரயில்வேதான் இயக்கும்
/
மேம்பால ரயில் சேவை 'மெட்ரோ'வுடன் இணைந்தாலும் ரயில்வேதான் இயக்கும்
மேம்பால ரயில் சேவை 'மெட்ரோ'வுடன் இணைந்தாலும் ரயில்வேதான் இயக்கும்
மேம்பால ரயில் சேவை 'மெட்ரோ'வுடன் இணைந்தாலும் ரயில்வேதான் இயக்கும்
ADDED : டிச 26, 2025 05:16 AM
சென்னை: 'வேளச்சேரி மேம்பால ரயில், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைத்தாலும், இரண்டு ஆண்டுகள் வரை தெற்கு ரயில்வேதான் ரயில்களை இயக்கும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை தற்போது, தினமும், 100 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரி - பரங்கிமலையை இணைக்கும் மேம்பால ரயில் பாதை திட்டப்பணி முடிந்துள்ளதால், இந்த தடத்தில் அடுத்த மாதம் இறுதிக்குள், ரயில் சேவை துவக்கப் படும்.
இதற்கிடையே, மேம்பால ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க, வாரியத்தின் ஒப்புதலை தொடர்ந்து, இதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
மேம்பால ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள், 'ஏசி' ரயில்கள் இயக்குவது, திட்ட மதிப்பீடு செலவு உ ள்ளிட்டவை குறித்து பேசி வருகிறோம்.
அடுத்த மாதம் இறுதிக்குள், வேளச்சேரி மேம்பால ரயி ல், மெட்ரோ நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
அப்படி, ஒப்பந்தம் மேற்கொண்டாலும், பல்வேறு கட்டமைப்புக ளை உருவாக்கி, மெட்ரோ ரயில் சேவை துவக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை, தெற்கு ரயில்வே சார்பில் கடற்கரை - வேளச்சேரி தடத்தில் மேம்பால ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

