/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது
/
இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது
ADDED : மார் 30, 2025 12:09 AM
கொளத்துார், கொளத்துாரைச் சேர்ந்த 20 வயது பெண், சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர், சஞ்சய் என்பவரை, கடந்த 2023ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், கொளத்துாரைச் சேர்ந்த கனிஷ்கர், 20, என்பவரை காதலித்துள்ளார். ஆனால், அவரது நடத்தை பிடிக்காததால், பிரிந்து விட்டார்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, பெண்ணின் வீட்டுக்கே சென்று, தன்னை காதலிக்குமாறும், தன்னுடன் வீட்டுக்கு வரும்படியும், கனிஷ்கர் மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து, அப்பெண் அளித்த புகாரின்படி, ராஜமங்கலம் போலீசார், நேற்று முன்தினம் கனிஷ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கு முன், புளியந்தோப்பை சேர்ந்த மாணவியர் இருவரிடம், இன்ஸ்டாகிராம் ஐ.டி., கேட்டு, கத்தியை காட்டி கனிஷ்கர் மிரட்டிய வழக்கிலும், கனிஷ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.