/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரியை ஆழப்படுத்தாததால் கொரட்டூரில் வீணாகும் உபரிநீர்
/
ஏரியை ஆழப்படுத்தாததால் கொரட்டூரில் வீணாகும் உபரிநீர்
ஏரியை ஆழப்படுத்தாததால் கொரட்டூரில் வீணாகும் உபரிநீர்
ஏரியை ஆழப்படுத்தாததால் கொரட்டூரில் வீணாகும் உபரிநீர்
ADDED : டிச 08, 2025 05:25 AM

கொரட்டூர்: கொரட்டூர் ஏரியை ஆழப்படுத்தாததால், கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அம்பத்துார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், அம்பத்துார் தொழிற்பேட்டை வழியாக கொரட்டூர் ஏரியை அடைகிறது.
பல ஆண்டுகளாக கொரட்டூர் ஏரி ஆழப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் ஏரியின் மட்டமும், உபரிநீர் வெளியேறும் கலங்கல் மட்டமும், ஏறத்தாழ ஒரே உயரத்தில் அமைந்துள்ளது.
இதனால், ஏரிக்கு வரும் உபரி நீரை சேகரிக்க வழிவகை இல்லாததால், அவை மொத்தமாக ரெட்டேரி, கொசஸ்தலை ஆறு வழியாக வீணாக கடலில் கலக்கிறது.
கொரட்டூர் ஏரியை ஆழப்படுத்தினால், 0.3 டி.எம்.சி., மழை நீரை தேக்க முடியும். அதன் வாயிலாக, ஏரியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீராதாரமாக அமையும் என்பதால், ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.