/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பெதா பை சலானி' ஜுவல்லரி வெள்ளிக்கு பிரத்யேக ஷோரூம்
/
'பெதா பை சலானி' ஜுவல்லரி வெள்ளிக்கு பிரத்யேக ஷோரூம்
'பெதா பை சலானி' ஜுவல்லரி வெள்ளிக்கு பிரத்யேக ஷோரூம்
'பெதா பை சலானி' ஜுவல்லரி வெள்ளிக்கு பிரத்யேக ஷோரூம்
ADDED : ஜன 11, 2024 01:03 AM
சென்னை,ஹவுஸ் ஆப் சலானி ஜுவல்லரி மார்ட்டின் 92.5 வெள்ளி நகைகளுக்கான 'பெதா பை சலானி' பிரத்யேக ஷோரூமை, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்துள்ளார்.
சேலையூர், வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த விற்பனையகத்தில் காது வளையங்கள், பெண்டன்ட், நெக்லஸ், வளையல், செயின் போன்ற எடை குறைவான நகைகள் மற்றும் மணமகளுக்கான திருமண நகை, நெக்லஸ் போன்ற அதிக எடை கொண்ட நகைகள், பலவித டிசைன்களில், அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு உள்ளன.
இவர்களின் பிரத்யேகமான 92.5 வெள்ளி நகைகள், நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வருமானம் கொண்ட 16-24 மற்றும் 25 - 34 வயதிற்குட்பட்ட பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
அனைத்து வெள்ளி நகைகளுக்கும் 'பி.ஐ.எஸ்., ஹால்மார்க்' மற்றும் மிக உயர்ந்த தரம், நீடித்த உழைப்புக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வெள்ளி நகைகளும், நிக்கல் சேர்க்கப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திற்கும் மேலாக வாடிக்கையாளர்கள் சேவைக்காக, இங்கு வாங்கப்படும் வெள்ளி பொருட்களுக்கு, வாழ்நாள் முழுதும் இலவசமாக பாலிஷிங் மற்றும் பழுது நீக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.