/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலம்பாக்கம் ஏரியை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
கோவிலம்பாக்கம் ஏரியை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 13, 2025 02:23 AM

கோவிலம்பாக்கம்:பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்டது கோவிலம்பாக்கம். இங்கு அமைந்துள்ள ஏரி, கழிவுநீர் சேகரிப்பு மையமாகவும், குப்பை கிடங்காகவும் காட்சியளிக்கிறது.
இந்த ஏரி, 50 ஆண்டுகளுக்கு முன், 180 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. தற்போது, ஆக்கிரிமிப்பாளர்களால், 45.5 ஏக்கராக சுருங்கியுள்ளது.
இந்த ஏரியில், நேரடியாக கழிவுநீர் கலக்கப்படுவதோடு, ஏரியை சுற்றிலும் குப்பை கழிவுகள் நிரம்பியுள்ளன.
எனவே, எஞ்சியுள்ள ஏரியை பாதுகாக்க, ஏரியை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை, குப்பையை அகற்றி, துார்வாரி, நடைபாதை அமைத்து, பல்லுயிர் பூங்காவாக மாற்ற பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, கழிவுநீர் ஏரியில் கலக்காதவாறு தடுத்து, மழைநீர் மட்டும் சேகரிக்கும் வகையில், 'மெட்ரோ' நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.