/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேனாம்பேட்டையில் நெரிசலை குறைக்க சோதனை ரீதியாக போக்குவரத்து மாற்றம்
/
தேனாம்பேட்டையில் நெரிசலை குறைக்க சோதனை ரீதியாக போக்குவரத்து மாற்றம்
தேனாம்பேட்டையில் நெரிசலை குறைக்க சோதனை ரீதியாக போக்குவரத்து மாற்றம்
தேனாம்பேட்டையில் நெரிசலை குறைக்க சோதனை ரீதியாக போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 26, 2025 05:23 AM

சென்னை: அண்ணசாலை, தேனாம்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, 'யு-டர்ன்' வசதியில், போலீசார் சில மாற்றங்களை அமல்படுத்தி உள்ளனர்.
அண்ணாசாலையில், 3.2 கி.மீ., மேம்பால கட்டு மான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணி நடக்கும் இடங்களில், நெரிசல் இன்றி வாகனங்கள் செல்வதற்காக, 'யு - டர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
எல்டாம்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள், இடதுபுறம் திரும்பி, தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே, யு - டர்ன் செய்து, தியாகராயா சாலை, தெற்கு போக் சாலை, விஜய ராகவா சாலை வழி யாக சென்று இடது புறம் அண்ணா சாலை திரும்பி செல்ல வேண்டும்.
எல்டாம்ஸ் சாலையில் இருந்து இடது புறம் திரும்பும் வாகனங்கள், சற்று துாரத்திலேயே யு - டர்ன் செய்வதால், இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சோதனை ரீதியாக போலீசார் சில மாற்றங்களை செய்துள்ளனர்.
இதன்படி, தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே உள்ள யு - டர்ன் வசதி மூடப்பட்டு, நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் அருகே, யு - டர்ன் வசதி மாற்றி தரப்பட்டுள்ளது.
நந்தனத்தில் இருந்து, கே.பி.தாசன் சாலை செல்லும் வாகனங்கள், நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் அருகே கொடுக்கப்பட்டுள்ள யு - டர்னில் திரும்பிச் செல்லலாம்.
இதுகுறித்து, போக்கு வரத்து எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது:
போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தி உள்ளோம். வாகனங்கள் நெரிசல் இன்றி நிற்காமல் செல்கின்றன. ஏனென்றால் மேம்பாலம் அமைப்பதற்காக இருபுறமும் அமைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப் பட்டுவிட்டன.
துாண்கள் அமைக்கப்பட்டு விட்டதால், அவ்விடத்தில் இரவு நேரத்தில் சாலை அமைக்கப்பட்டு விடும். அதிகாரிகள் உத்தரவிட்டால், தற்போதைய போக்குவரத்து மாற்றம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

