/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெடித்து சிதறிய சிலிண்டர் அம்பத்துாரில் குடிசை நாசம்
/
வெடித்து சிதறிய சிலிண்டர் அம்பத்துாரில் குடிசை நாசம்
வெடித்து சிதறிய சிலிண்டர் அம்பத்துாரில் குடிசை நாசம்
வெடித்து சிதறிய சிலிண்டர் அம்பத்துாரில் குடிசை நாசம்
ADDED : ஆக 08, 2025 12:11 AM

அம்பத்துார்,'காஸ்' சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் எரிந்து நாசமாயின.
அம்பத்துார், மேனாம்பேடு, பிள்ளையார் கோவில் இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா, 45. இவர், தாய் வரலட்சுமி, 65, மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
வீட்டின் அருகே உள்ள கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று மாலை குடும்பத்துடன் சென்றுள்ளார். அந்நேரம் வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் குடிசை மற்றும் வீட்டிலிருந்த 'டிவி, பிரிஜ், வாஷிங் மிஷின்' உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.