/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
/
'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ADDED : நவ 24, 2024 12:22 AM
சென்னை
'இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்' திட்டத்தில், சென்னையில் வசிக்கும் பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்க, அடுத்த மாதம் 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
அரசு வெளியிட்ட அறிக்கை:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் என்ற, புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி, சென்னை மாநகரில், பெண் ஓட்டுநர்களின் வாயிலாக 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன.
சுய தொழிலில் பெண்கள் சிறந்து விளங்குவதை ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்று பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும், இத்திட்டத்தின் நோக்கம்.
பெண்களின், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு ஆட்டோவிலும், காவல்துறையின் உதவி எண்களுடன், இணைக்கப்பட்ட ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டிருக்கும்.
இத்திட்டத்தில், பயன்பெற, சென்னை மாநகரிலுள்ள தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்கள் விண்ணப்பிக்க, அக்., 22ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, இம்மாதம் 23ம் தேதி இறுதி என்ற நிலையில், தற்போது டிச., 10 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி, தற்போது நீக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும், ஓட்டுநர் உரிமம் பெற்ற, 25 வயதிலிருந்து 45 வயதிற்குள் இருக்கும் பெண்கள் மட்டும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில், சென்னையிலுள்ள, 250 பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை, சமூக நல அலுவலர், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600 001 என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

