ADDED : செப் 22, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், இளம் டாக்டர்களுக்கான கல்பவிருக் ஷா பயிலரங்கம் சென்னையில் துவங்கியது.
இதில், 30க்கும் மேற்பட்ட கண் நிபுணர்கள், 250க்கும் மேற்பட்ட இளம் டாக்டர்கள் பங்கேற்றனர். 17வது ஆண்டாக நடைபெறும் பயிலரங்கத்தை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி துவக்கி வைத்தார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழும இயக்குனர் அதியா அகர்வால், டாக்டர்கள் சவுந்தரி, திவ்யா அசோக் குமார், ப்ரீத்தி நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.