/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி
/
சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி
சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி
சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 03, 2025 12:35 AM

குன்றத்துார், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை சார்பில், 40 வது தேசிய கண்தான விழாவை முன்னிட்டு குன்றத்துாரில் நேற்று, கண்தான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை குன்றத்துார் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார். குன்றத்துார் அரசு தொடக்கப்பள்ளி அருகே துவங்கிய பேரணி, முக்கிய சாலை வழியாக சென்று, முருகன் கோவில் அருகே உள்ள பள்ளியில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர், விளம்பர பாதாகைகளை கையில் ஏந்தி, கண்தானம் குறித்து கோஷம் எழுப்பியவாறு சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த பேரணியில் லயன் சங்க நிர்வாகிகள் மணிசேகர், சிவகுமார், குணசேகர், குன்றத்துார் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, சங்கரா கண் மருத்துவமனையின் அறங்காவலர் எஸ்.விஸ்வநாதன், நிர்வாக இயக்குனர் வி.சங்கர், பொது மேலாளர் எம்.முத்துகுமார் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.
**