ADDED : செப் 27, 2024 12:51 AM
கீழ்ப்பாக்கம்,எஸ்றா சற்குணத்தின் உடல், கீழ்ப்பாக்கம் கிறிஸ்துவ கல்லறையில், 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லுாரி அமைப்பாளரும், பேராயருமான எஸ்றா சற்குணம், 86, உடல் நலக்குறைவால் கடந்த 22ம் தேதி இறந்தார்.
அவரது உடல், அன்று இரவு, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையிலுள்ள வின்சென்ட் பார்க்கில் பதப்படுத்தப்பட்டது. பின், நேற்று காலை அவரது உடலை, பொதுமக்கள் அஞ்சலிக்காக வானகரத்தில் வைத்தனர்.
அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினர், அஞ்சலி செலுத்தினர்.
மாலை, 3:00 மணியளவில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில், அவரது உடல் ஊர்வலமாக கீழ்ப்பாக்கம் கிறிஸ்துவ கல்லறைக்கு கொண்டுவரப்பட்டு, 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.