ADDED : மார் 24, 2025 03:49 AM
சென்னை:சென்னையில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் வசதி இருந்தது. சமீபத்தில், மூன்றாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கேற்ப கட்டணமும் உயர்ந்தது.
வியாபாரம் சரியாக இல்லாவிட்டால், சில மாதங்களில் கூட வியாபாரிகள் கடைகளை மூடிவிடுவர். அப்படியிருக்க, மூன்று ஆண்டுகள் உரிமம் பெற முடியும் என, வியாபாரிகள் தயக்கம் காட்டினர்.
இதையடுத்து வணிகர்கள் சென்னை மாநகராட்சியின், chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தொழில் உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம் என, மாநகராட்சி அறிவிதுள்ளது.
சேவை மையங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் உரிம ஆய்வாளர்கள் வைத்துள்ள கையடக்க கருவி வாயிலாக, வரும் 31ம் தேதிக்குள் உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம்.