/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஜய் கட்சியில் கோஷ்டி பூசல் தனித்தனியாக கொடியேற்றம்
/
விஜய் கட்சியில் கோஷ்டி பூசல் தனித்தனியாக கொடியேற்றம்
விஜய் கட்சியில் கோஷ்டி பூசல் தனித்தனியாக கொடியேற்றம்
விஜய் கட்சியில் கோஷ்டி பூசல் தனித்தனியாக கொடியேற்றம்
ADDED : அக் 09, 2024 12:12 AM

ஒட்டியம்பாக்கம், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்குவதாக அறிவித்து, அக்கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்தார்.
கட்சியின் முதல் மாநாடு, வரும் 27ல் நடக்கவுள்ள நிலையில், நிர்வாகிகள் தங்கள் பகுதியில், கட்சிக் கொடி ஏற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லுார் தொகுதி ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில், சென்னை புறநகர் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையிலும்; தொண்டர் அணி தலைவர் லோகு தலைமையிலும், கட்சியினர் இரு பிரிவாக செயல்படத் துவங்கியுள்ளனர். கடந்த வாரம் ஒட்டியம்பாக்கம் பிரதான பேருந்து நிலையம், ஏரிக்கரை பேருந்து நிலையம் மற்றும் காந்தி தெரு பிரதான சாலை ஆகிய மூன்று இடங்களில், சரவணன் தலைமையிலான கோஷ்டியினர் கொடியேற்றினர்.
இதையடுத்து, லோகு தலைமையிலான கோஷ்டியினர், அந்த மூன்று இடங்களிலும், தங்கள் சார்பில் கம்பத்தை நட்டு, அதில் கொடியேற்றினர்.
இதனால், மூன்று இடங்களிலும், தலா இரு கம்பங்களில் விஜய் கட்சியின் கொடி பறக்கவிட்டு, தங்கள் கோஷ்டி பூசலை வெளிபடுத்தி வருகின்றனர்.

