போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை: 579 'பிளைவுட்'கள் பறிமுதல்
போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை: 579 'பிளைவுட்'கள் பறிமுதல்
UPDATED : ஆக 26, 2026 10:25 PM
ADDED : ஆக 26, 2026 10:13 PM
சென்னை:சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், கிடங்குகளில், போலி ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 579 'பிளைவுட்'களை, தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்திய தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து, சென்னையில் உள்ள கண்ணாடி, பிளைவுட் மற்றும் ஹார்டுவேர் கடை மற்றும் அதன் கிடங்கில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, கிடங்கு மற்றும் கடைகளில், 579 பிளைவுட்களில் போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பதிக்கப்பட்டடு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கிடங்கு மற்றும் கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர்.
இதுகுறித்து, பி.ஐ.எஸ்., மூத்த இயக்குநர் தயானந்த் கூறுகையில், ''பிளைவுட் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்முன், 'பி.ஐ.எஸ்., கேர்' செயலி அல்லது இணையதளம் மூலம் ஐ.எஸ்.ஐ., முத்திரையின் உண்மைத் தன்மையை சரிபார்த்து வாங்க வேண்டும். போலி பொருட்கள் குறித்து. cnbo1@bis.gov.in மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம்,'' என்றார்.
