/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.13 கோடி போலி சிகரெட் ஏர்போர்ட்டில் பறிமுதல்
/
ரூ.13 கோடி போலி சிகரெட் ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : நவ 10, 2025 01:36 AM
சென்னை: துபாயில் இருந்து, கப்பலில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 13 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு போலி சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை துறைமுக சுங்கத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, துபாயில் இருந்து, தடை செய்யப்பட்ட வெளிநாட்டு போலி சிகரெட்டுகள் கப்பலில் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து, சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில், 'பிரின்டிங் இங்க்' என, அனுப்பப்பட்டு இருந்த கன்டெய்னரை திறந்து சோதனை செய்தனர். அதில், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள, 64.70 லட்சம் வெளிநாட்டு போலி சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஏஜன்டுகள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

