/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.ஜி.பி., பெயரில் போலி முகநுால் கணக்கு : போலீஸ் விசாரணை
/
டி.ஜி.பி., பெயரில் போலி முகநுால் கணக்கு : போலீஸ் விசாரணை
டி.ஜி.பி., பெயரில் போலி முகநுால் கணக்கு : போலீஸ் விசாரணை
டி.ஜி.பி., பெயரில் போலி முகநுால் கணக்கு : போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 05, 2025 12:34 AM

டி.ஜி.பி., ரேங்க் ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப்ராய் ரத்தோட். இவர் தற்போது, செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் உயர் பயிற்சியகத்தின் இயக்குனராக உள்ளார்.
அவரது பெயர் மற்றும் புகைப்படத்துடன், சைபர் குற்றவாளிகள் போலியாக முகநுால் கணக்கு துவங்கி உள்ளனர்.
அந்த கணக்கில் இருந்து, போலீஸ் உயர் அதிகாரிகள், அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கும், நட்பில் இணைய அழைப்பு கொடுத்து உள்ளனர். பண மோசடியில் ஈடுபட, குற்றவாளிகள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர்.
இதை பார்த்த நண்பர்கள் சிலர், சந்தீப் ராய் ரத்தோட்டிற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, முகநுால் நிறுவனத்திற்கும், சைபர் கிரைம் போலீசிலும், சந்தீப் ராய் ரத்தோட் புகார் அளித்துள்ளார். சைபர் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***