/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 லட்சம் மோசடி செய்த ஐகோர்ட் போலி வக்கீல் கைது
/
ரூ.2 லட்சம் மோசடி செய்த ஐகோர்ட் போலி வக்கீல் கைது
ADDED : ஜன 05, 2025 12:27 AM

சென்னை,பழவந்தாங்கல், பிருந்தாவன் நகர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன், 42. இவருக்கு 2018ல் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதற்கு, சரவணனின் நண்பர் பாலாஜி என்பவர், கிரெடிட் எனும் கடன் அட்டை வாயிலாக, 11 லட்சம் ரூபாய் செலுத்தினார்.
தவணை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், பாலாஜிக்கு வங்கி நிர்வாகம் நெருக்கடி கொடுத்துள்ளது.
இப்பிரச்னையை தீர்க்க, உயர் நீதிமன்றத்திற்கு சரவணன் சென்றுள்ளார். அங்கு, வழக்கறிஞர் உடையில் இருந்த வினோத்குமார் என்பவர், வங்கிகள் தொடர்பான வழக்குகளை நடத்துவதாக அறிமுகமாகி உள்ளார்.
கடன் அட்டை பிரச்னையை, லோக் அதாலத் நீதிமன்றத்தில் வாதாடி நியாயம் பெறலாம் எனக்கூறி, 2023ல், வழக்கிற்காக வரைவோலை மற்றும் வழக்கறிஞர் கட்டணம் என, 2.38 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.
ஆனால், வழக்கு நடத்தாமல், பணத்தையும் திரும்ப தராமல் வினோத்குமார் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில், பாலாஜி தரப்பு புகார் அளித்தது.
விசாரித்த போலீசார், வழக்கறிஞர் என ஏமாற்றி பணம் பறித்த வினோத்குமாரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

