/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு துறை அலுவலர்களிடம் சிக்கிய பல்லாவரம் சந்தையில் 'போலி'கள்
/
உணவு துறை அலுவலர்களிடம் சிக்கிய பல்லாவரம் சந்தையில் 'போலி'கள்
உணவு துறை அலுவலர்களிடம் சிக்கிய பல்லாவரம் சந்தையில் 'போலி'கள்
உணவு துறை அலுவலர்களிடம் சிக்கிய பல்லாவரம் சந்தையில் 'போலி'கள்
ADDED : அக் 05, 2024 12:16 AM
பல்லாவரம், பல்லாவரம், பழைய டிரங்க் சாலையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் சந்தை நடக்கிறது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இச்சந்தை பிரபலம்.
இங்கு, குண்டு ஊசி முதல் குளிர்சாதன பெட்டி வரை, வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும். பழைய பொருட்கள் தேவையெனில், இங்கு வந்தால் வாங்கிச் செல்லலாம்.
இதைத் தவிர பூச்செடிகள், காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
வெள்ளிக்கிழமைதோறும், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர், இருசக்கர வாகனங்களில் கூட்டம் கூட்டமாக வந்து, தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இச்சந்தையில் கலப்பட நெய், தேன் மற்றும் அப்பளம் விற்பனை செய்யப்படுவதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நேற்று இச்சந்தையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, நான்கு பேரிடம் இருந்து, 40 கிலோ நெய், 2 பேரிடம் இருந்து, 6 லிட்டர் தேன், மூன்றரை கிலோ அப்பளம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவற்றை சோதனைக்கு, ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். 'அறிக்கை வந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.