/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அட்டைதாரரின் அனுமதியின்றி குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம்
/
அட்டைதாரரின் அனுமதியின்றி குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம்
அட்டைதாரரின் அனுமதியின்றி குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம்
அட்டைதாரரின் அனுமதியின்றி குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம்
ADDED : மே 24, 2025 12:19 AM

வில்லிவாக்கம்:அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டு, வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்தவர் கணேசன், 63.
நேற்று காலை, அதே பகுதி சிந்தாமணி கூட்டுறவு ரேஷன் கடைக்கு சென்று 1.5 கிலோ சர்க்கரை கேட்டுள்ளார். கடையின் பொறுப்பாளர் 1 கிலோ சர்க்கரை மட்டும் வழங்கியுள்ளார். அரை கிலோ வழங்காதது குறித்து கேட்டதற்கு, தங்கள் மகன் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், இருவருக்கான அளவீட்டு முறையில் வழங்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கணேசன் கூறியதாவது:
பல ஆண்டுகளாக இதே ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகிறேன். என் மகளுக்கு திருணமானதால், அவரது பெயரை மட்டும் நீக்கினேன். என் மகன் பெயரை நான் நீக்க விண்ணப்பிக்கவில்லை.
ஆனால், என் அனுமதியின்றி, திருமணமாகாத மகனின் பெயரை நீக்கியது சட்டப்படி குற்றம். என் ஓ.டி.பி., எண் இல்லாமல் இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.
அதேபோல், மாதந்தோறும் நான் வாங்கும் பொருட்களை தவிர, கூடுதலாகவே பொருட்கள் வாங்கியது போல் குறுந்தகவல் வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டால் முறையாக பதில் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.