ADDED : ஜூன் 26, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர், மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 54; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில் காத்தான் கடையில் இருந்து தட்டாம்பட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
குண்டுமணிசேரி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மாருதி கார் மொபட் மீது மோதியது. இதில், பாஸ்கரன் துாக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
அணைக்கட்டு போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான செங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.