உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர் 'அட்மிட்'
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர் 'அட்மிட்'
ADDED : நவ 30, 2025 01:49 AM

அ நிறம் | அளவு
அம்பத்துார்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் துாய்மை பணியாளர், உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அம்பத்துார், கல்யாணபுரம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள, உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில், சென்னை மாநகராட்சியின் திரு.வி.க., நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் பணியாற்றிய, நான்கு பெண் துாய்மை பணியாளர்கள், 13வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில், திரு.வி.க., நகர் மண்டலத்தைச் சேர்ந்த ஜெனோவா, 52, என்பவருக்கு, நேற்று காலை உடல்நல குறைவு ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மூவருக்கும், உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
