/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேகத்தடையால் உயிரிழப்பு வண்ணம் பூசும் பணி தீவிரம்
/
வேகத்தடையால் உயிரிழப்பு வண்ணம் பூசும் பணி தீவிரம்
ADDED : மார் 02, 2024 12:03 AM
தாம்பரம், தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகர், சாரங்கபாணி தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 36; கூலி தொழிலாளி.
இரு நாட்களுக்கு முன், சிட்லப்பாக்கம், சர்வமங்களா நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வண்ணம் பூசப்படாத வேகத்தடையில் ஏறி, நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி, பரிதாபமாக இறந்தார்.
இதேபோல், பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற வள்ளி, 48, என்பவர், நேற்று முன்தினம் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி சாலைகளில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக, வண்ணம் பூசி, எதிரொலிப்பான் மற்றும் எச்சரிக்கை பலகை பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து மண்டலங்களிலும், பொறியியல் பிரிவினர், ஒவ்வொரு சாலையிலும் உள்ள வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

