/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த தந்தை, மகன்
/
மாணவியை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த தந்தை, மகன்
மாணவியை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த தந்தை, மகன்
மாணவியை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த தந்தை, மகன்
ADDED : நவ 13, 2024 02:25 AM

வளசரவாக்கம்:கல்லுாரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, 23 வயது கல்லுாரி மாணவி, விடுமுறை நாட்களில், சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்கு வருவது வழக்கம்.
கடந்த 2023 டிசம்பரில் இவருக்கு,'இன்ஸ்டாகிராம்' வாயிலாக சுஜித் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
இருவரும் பேசி, பழகி வந்த நிலையில், சுஜித் தனக்குத்தானே கத்தியால் கிழித்துக் கொண்டு, இளம்பெண்ணை நிர்வாணமாக 'வீடியோ கால்' செய்யும்படி வற்புறுத்தி உள்ளார்.
இதையடுத்து, இரு முறை வீடியோ கால் செய்த நிலையில், அதை பதிவு செய்து வைத்துக் கொண்டு, கடந்த ஏப்ரலில் இளம்பெண்ணை மிரட்டி, பணம் பெற்றுள்ளார். இதேபோல் பலமுறை மிரட்டி, நகை மற்றும் பணம் பெற்றுள்ளார்.
கடந்த 8ம் தேதி, சுஜித் மற்றும் அவரது தந்தை ஆகியோர், '50,000 ரூபாய் தராவிட்டால், ஆபாச படங்களை 'இன்ஸ்டாகிராமில்' பதிவிடுவோம்' என மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்படி, வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடை அடுத்த, மடிச்சலைச் சேர்ந்த வின்சென்ட், 55, அவரது மகன் சுஜித், 27, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.