ADDED : அக் 18, 2024 12:13 AM
செங்குன்றம், ராஜஸ்தானை சேர்ந்தவர் மாதுராம், 30. செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லுாரில், மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இவர், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்றையும் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கடையை துாய்மை செய்ய வேண்டும் என, மனைவியிடம் கூறி விட்டு, மகன் நவீனுடன், 12, சென்ற மாதுராம், நேற்று காலையிலும் வீடு திரும்பவில்லை.
அவரை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாததால், மாதுராமின் மனைவி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். செங்குன்றம் போலீசார், மாதுராமின் பேன்சி ஸ்டோருக்கு சென்று ஷட்டரை திறந்து பார்த்தபோது, தந்தையும், மகனும் துாக்கிட்ட நிலையில், இறந்து கிடந்துள்ளனர்.
இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.