UPDATED : ஜூன் 30, 2026 04:28 PM
ADDED : ஜூன் 30, 2026 04:20 PM
காஞ்சிபுரம்:குடும்ப பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், போதையில் மகனை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகர் பகுதியான அறப்பெரும்செல்வி தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, 50, பூ கட்டி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ரூபேஷ், 25. 'டாட்டூ' கலைஞராக சென்னையில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தந்தை, மகன் இருவரும் 'குடி'போதையில் இருந்தனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரூபேஸ் கத்திரிக்கோலால் ஏழுமலையை குத்தியுள்ளார். காயமடைந்த ஏழுமலை மகனிடம் இருந்த கத்திரிக்கோலை பிடுங்கி ரூபேஷை குத்தியுள்ளார். ரூபேஷ் மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள், ரூபேஷை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, ரூபேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.
சிவகாஞ்சி போலீசார் ரூபேஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
