ADDED : மார் 15, 2026 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்: அயனாவரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த, 6ல் வீட்டில் இருந்த 16 வயதான இளைய மகளிடம், அவரது தந்தை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்து, அதிர்ச்சி அடைந்த தாய், அயனாவரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
தந்தையை பிடித்து போலீசார் விசாரித்தபோது, தான் சற்று மனநிலை பா திக்கப்பட்டவன் என்றார்.
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் நடந்த சோதனையில், அவருக்கு மனநல பாதிப்பு ஏதும் இல்லை என்பது தெரிய வந்ததால், போக்சோ வழக்கில், 47 வயதான தந்தையை போலீசார் கைது செய்தனர்.

