sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகனை கழுத்து நெரித்து கொன்று தந்தை தற்கொலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாய் கவலைக்கிடம்

/

மகனை கழுத்து நெரித்து கொன்று தந்தை தற்கொலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாய் கவலைக்கிடம்

மகனை கழுத்து நெரித்து கொன்று தந்தை தற்கொலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாய் கவலைக்கிடம்

மகனை கழுத்து நெரித்து கொன்று தந்தை தற்கொலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாய் கவலைக்கிடம்

2


UPDATED : அக் 28, 2025 06:55 AM

ADDED : அக் 28, 2025 12:46 AM

Google News

UPDATED : அக் 28, 2025 06:55 AM ADDED : அக் 28, 2025 12:46 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ஆன்லைன்' வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், 7 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மத்திய அரசு ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அண்ணா நகரில் நடந்துள்ளது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை அண்ணா நகர், 18வது பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நவீன் கண்ணன், 38. இவர், தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்காளர் அலுவலகத்தில், சீனியர் ஆடிட்டராக பணிபுரிந்தார்.

இவரது மனைவி நிவேதிதா, 34; இவர், பெரம்பூர், தெற்கு ரயில்வே 'லோகோ' அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர்களின் மகன் லிவின், 7. இவர்களுடன், நவீன் கண்ணனின் வயதான தந்தை மற்றும் தாய் புவனேஸ்வரி தங்கியிருந்தனர்.

நவீன் கண்ணன், நேற்று காலை தாய் புவனேஸ்வரியிடம் வெளியில் செல்வதாக கூறி, பதற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். சில மணி நேரத்திற்கு பின், மொபைல் போனில் தாயை தொடர்பு கொண்டவர், மனைவியையும், மகனையும் தொந்தரவு செய்ய வேண்டாம்; அவர்கள் துாங்குகின்றனர் என கூறியுள்ளார்.

'பலமுறை போன் செய்தும் நிவேதிதா போனை எடுக்கவில்லை' என, அவரது தாய் இந்திரா தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த புவனேஸ்வரி, மகன் அறைக்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது, பேரன் படுகையில் மயங்கி நிலையிலும், நிவேதிதா கழுத்தில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியபடியும் கிடந்தனர்.

புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, தரைத்தளத்தில் இருந்த தனியார் அங்காடி ஊழியர்கள் ஓடி வந்து, நிவேதா மற்றும் சிறுவனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நிவேதிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து வந்த திருமங்கலம் போலீசார், நிவேதாவிடம் விசாரணை மேற்கொண்டு, நவீன் கண்ணனை தேடினர். இதற்கிடையில், பகல் 11:00 மணியளவில், வில்லிவாக்கம் - கொரட்டூர் இடையே, 'சதாப்தி எக்ஸ்பிரஸ்' ரயில் முன் பாய்ந்து, நவீன் கண்ணன் தற்கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரியும் நவீன் கண்ணன் மீது, கையாடல் புகார் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 'ஆன்லைன்' வர்த்தகத்தில், லட்சக்ணக்கில் பணத்தை முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நவீன் கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதற்காக, மகனை கொலை செய்து, மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து, தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்காலாம் என, போலீசார் தரப்பில் கூறினர்.

காப்பாற்ற வேண்டாம் கெஞ்சிய நிவேதிதா உயிருக்கு போராடிய நிவேதிதாவை மீட்கும்போது, ''தன் கணவர் நல்லவர். அவர் மீது எந்த தவறும் இல்லை; மூவரும் சேர்ந்தே சாக முடிவு எடுத்தோம். என்னை காப்பற்ற வேண்டாம்' என, கெஞ்சியுள்ளார். அவற்றை சிலர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர். **








      Dinamalar
      Follow us