/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூளைமேடு மாணவியின் ஆதார் எண் புதுச்சேரியில் இணைத்ததால் தவிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் தந்தை மனு

UPDATED : டிச 23, 2025 08:13 AM
ADDED : டிச 23, 2025 04:58 AM
பாரிமுனை: தமிழகத்தைச் சேர்ந்த ஒன் பதாம் வகுப்பு மாணவியின் ஆதார் எண், புதுச்சேரியில் இணைக்கப்பட்டிருப்பதால், பள்ளியில், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் தவித்து வருகிறார்.
சென்னை, சூளைமேடு, மேற்கு நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 35; கூலி தொழிலாளி. இவரது மகள் மதுமிதா, 14. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார்.
இப்பள்ளியி ல், மாணவியின் ஆதார் எண்ணை யு.டி.ஐ.எஸ்.இ., எனும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு தளத்தில் இணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதே போல் குடும்ப அட்டைதாரர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக, மாணவியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, அருகில் உள்ள இ - சேவை மையத்தில் கே ட்டபோது, மா ணவியின் ஆதார் எ ண், புதுச்சேரியில் இணைக்கப்பட்டது தெரிய வந்தது.
அதாவது , மதுமிதாவின் பெயர் மற்றும் பிறந்த தேதியுடன் வேறொருவருடைய பெற்றோர் பெயர் மற்றும் புகைப்படத்துடன், இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஆதார் எண்ணை மாற்றுவதற்காக, கடந்த நான்கு மாதங்களாக, கோயம்பேடில் உள்ள ஆதார் மைய அதிகாரியிடம் கிருஷ்ணமூர்த்தி ப லமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், சென்னை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த கி ருஷ்ணமூர்த்தி, துணை கலெக்டர் வெற்றிகுமரனிடம் தன் மகளின் ஆதார் எண்ணை மாற்றி தர கோரி மனு அளித் தார்.