/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரும்பு கேட் உடைந்து விழுந்ததில் தந்தை கண்முன் சிறுமி பரிதாப பலி
/
இரும்பு கேட் உடைந்து விழுந்ததில் தந்தை கண்முன் சிறுமி பரிதாப பலி
இரும்பு கேட் உடைந்து விழுந்ததில் தந்தை கண்முன் சிறுமி பரிதாப பலி
இரும்பு கேட் உடைந்து விழுந்ததில் தந்தை கண்முன் சிறுமி பரிதாப பலி
ADDED : பிப் 15, 2025 12:30 AM

நங்கநல்லுார்சென்னை, நங்கநல்லுார், எம்.எம்.டி.சி., காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சம்பத், 45, சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். இவரது, இரண்டவாது மகள் ஐஸ்வர்யா, 7. நங்கநல்லுாரில் உள்ள தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து மகளை பைக்கில் வீட்டுக்கு சம்பத் அழைத்து வந்துள்ளார். குடியிருப்பின், முகப்பு இரும்பு கேட்டை சிறுமி திறந்துவிட, சம்பத் பைக்குடன் உள்ளே சென்றார்.
ஐஸ்வர்யா மீண்டும் கதவை மூட முயன்றபோது, திடீரென கேட் உடைந்தது.
இதனால், தடுமாறி கீழே விழுந்த சிறுமி மீது, இரும்பு கேட் பெரும் சத்தத்துடன் சரிந்து விழுந்தது. அதிர்ச்சி அடைந்த சம்பத் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து, கேட்டின் அடியில் சிக்கியிருந்த சிறுமியை மீட்டனர்.
தலை நசுங்கிய நிலையில், பலத்த காயம் அடைந்த ஐஸ்வர்யாவை, கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பின் முகப்பு இரும்பு கேட், பல நாட்களாக துரு பிடித்து பழுதடைந்துள்ளது. அதை சரி செய்யாமல் விட்டதால், உயிர் பலி ஏற்பட்டது தெரியவந்தது.