ADDED : ஜன 18, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, நெமிலிச்சேரி அணுகு சாலையில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது.
இந்த மின் விளக்கு ஒரு வாரத்துக்கு மேலாக எரியாமல்,நெமிலிச்சேரி, சி.டி.எச்., சாலை இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
ஏற்கனவே வெளிவட்ட சாலையின் கீழ், மின் விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், பழுதான உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.