ADDED : ஜன 18, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரையம்பட்டு, குமரன் நகர் அருகே, கடந்த மாத மழை வெள்ளத்தால் நீர்வள ஆதாரத்துறையின் உபரிநீர் போக்கு கால்வாயையொட்டி மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளம் உருவானது.
சோத்துப்பாக்கம் சாலை வழியாக, அந்த இடத்தை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி, அதில் பயணிப்போர் காயமடைகின்றனர்.
இரவில் நிலைமை மேலும் மோசமாகிறது. இதுவரை நீர்வள ஆதாரத்துறையினர், சேதமடைந்த பகுதியை சீரமைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெரிய விபத்து, உயிரிழப்பு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை வேண்டும்.
-கோபி கிருஷ்ணா, பேருந்து ஓட்டுனர், செங்குன்றம்.