/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளம்பர பலகைகளால் அமைந்தகரையில் அச்சம்
/
விளம்பர பலகைகளால் அமைந்தகரையில் அச்சம்
ADDED : பிப் 19, 2024 01:43 AM

அமைந்தகரை:அமைந்தகரையில், விளம்பர பலகைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில், பிரமாண்ட விளம்பரப் பலகைகளால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது.
நீதிமன்றங்களும் பேனர்கள், விளம்பரங்களை கட்டுப்படுத்த, கடும் உத்தரவுகளை பிறப்பித்தன.
இருப்பினும் அரசியல் செல்வாக்கு, நீதிமன்ற உத்தரவு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, அண்ணா நகரில் பல இடங்களில், வண்ண விளக்குகளுடன் ராட்சத விளம்பர பலகைள் முளைத்துள்ளன. கட்டடங்களில் அடுக்கப்படும் இதுபோன்ற ராட்சத விளம்பர பலகைகளால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், இதுபோன்ற கண்கவரும் விளம்பர பலகைகள் தற்போது அதிக அளவில் உள்ளன.
இவற்றை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

