/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி சாலையில் உலாவும் மாடுகளால் அச்சம்
/
புகார் பெட்டி சாலையில் உலாவும் மாடுகளால் அச்சம்
ADDED : டிச 31, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் உலாவும் மாடுகளால் அச்சம்
ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோவர்த்தனகிரி, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தோர், குப்பை கழிவுகளை விதிமீறி சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர்.
அவற்றில் உள்ள உணவு கழிவுகளை சாப்பிட, பசு மாடுகள் மற்றும் நாய்கள்வருகின்றன. அவை, சாலையில் அங்கும் இங்கும் ஓடுவதால், இருசக்கரவாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இங்கு குப்பை கொட்டுவதை தடை செய்து, சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவணன், ஆவடி.