/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபத்தான மின்பகிர்மான பெட்டியால் உயிர் பலி அச்சம்
/
ஆபத்தான மின்பகிர்மான பெட்டியால் உயிர் பலி அச்சம்
ADDED : நவ 05, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆபத்தான மின்பகிர்மான பெட்டியால் உயிர் பலி அச்சம்
திருவொற்றியூர் சடையங்குப்பம் மேம்பாலத்தின் கீழ் இருபுறமும், 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதன் காரணமாக, அப்பகுதியில் ஊழியர்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும்.
மேம்பாலத்தின் இருபுறமும் மின்வாரியத்தின், மின்பகிர்மான பெட்டிகள் உள்ளன. இவை, கதவுகள் இன்றி அபாயகரமாக, திறந்த நிலையில் காணப்படுகிறது. இப்பகுதியில் மழைநீர் தேங்கும்.
அதுபோன்ற நேரங்களில், மின்கசிவு ஏற்பட்டு உயிர் பலி ஏற்படக்கூடும். எனவே, மின்பெட்டியை உயர்த்துவதுடன், பாதுகாப்பான முறையில் கதவுகள் அமைக்க வேண்டும்.
- எஸ். கிறிஸ்டி, விம்கோ நகர்.

