/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூங்காவில் திரியும் நாய்களால் அச்சம்
/
பூங்காவில் திரியும் நாய்களால் அச்சம்
ADDED : ஜன 11, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார் மண்டலத்தின், முகப்பேர், கொரட்டூர், பாடி, இளங்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பூங்காக்களில், தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பூங்காக்களில் உணவு கழிவுகளை உண்பதற்காக, தெருநாய்கள் வந்து, செல்கின்றன. அவற்றால், நடை பயிற்சி செய்வோர் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
பூங்காக்களில் சுற்றி வரும் நாய்கள், திடீரென கடிக்க பாய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. மாநகராட்சி பூங்கா பராமரிப்பு துறை, தெரு நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்துார்பாண்டி, 4, அம்பத்துார்.