/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பற்ற நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அச்சம்
/
பராமரிப்பற்ற நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : பிப் 10, 2024 12:25 AM

பூந்தமல்லி,
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி வரை, சாலை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2021ல் துவக்கப்பட்டது.
இதில், பூந்தமல்லி, சென்னீர்குப்பம் முதல் பூந்தமல்லி பேருந்து பணிமனை வரையிலான 4.1 கி.மீ., துாரம், 84.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், கடந்த பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.
ஓராண்டுக்குள் பணிகள் முடிக்க திட்டமிட்ட நிலையில், தற்போது வரை பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளன.
பல இடங்களில், மின் விளக்குகள் சரியாக எரியாததால், சாலை இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், பூந்தமல்லி - சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பல மாதங்களாக நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை.
இதனால், சாலையில் மணல் படுகை சேர்ந்துள்ளது. துாசி பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.