/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கதவு விழுந்ததில் பெண் போலீஸ் படுகாயம்
/
கதவு விழுந்ததில் பெண் போலீஸ் படுகாயம்
ADDED : ஜன 03, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.சி.எப்., ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவி, 34; வில்லிவாக்கத்தில் வசித்து ஐ.சி.எப்., ரயில்வே அருங்காட்சியகத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசாக பணிபுரிகிறார்.
நேற்று மாலை பணியில் இருந்தபோது அருங்காட்சியகத்தில் உள்ள நுழைவாயில் கதவை மூட முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத கதவு சரிந்து, தேவியின் மீது விழுந்தது.
இடுப்பு எலும்பு முறிந்ததால், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன், இதே போல் கதவை மூட முயன்றவர் சம்பவ இடத்திலேயேபலியானார்.