ADDED : ஏப் 03, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஐந்தாம் கட்டமாக, ஐந்து தொகுதிகளுக்கான, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன், கூட்டணி அமைத்துள்ள ராமதாஸ், ஏற்கனவே, நான்கு கட்டங்களாக 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஐந்தாம் கட்டமாக, ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி, விக்கிரவாண்டியில் புகழேந்தி; திருப்பத்துாரில் விஜயகுமார்; பவானியில் ஆறுமுகம்; நத்தம் தொகுதியில் ராஜசேகரன்; பரமத்திவேலுாரில் பிரதாப் ஆகியோர் போட்டியிடுவர் என, ராமதாஸ் அறிவித்துள்ளார்.
