ADDED : மார் 21, 2026 03:18 AM
அ நிறம் | அளவு
சென்னை: ராயப்பேட்டை, நல்லண்ண முதலி தெருவைச் சேர்ந்தவர் மசூத்பாஷா, 19; கல்லுாரி மாணவர். இவர், கடந்தாண்டு 10,000 ரூபாய்க்கு சண்டை சேவல் ஒன்றை வாங்கி, வீட்டில் வளர்த்து வந்தார்.
கடந்த 15ம் தேதி வீட்டு வளாகத்தில் விடப்பட்டிருந்த அவரது சேவல் மாயமானது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்மநபர்கள் இருவர் சேவலை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார், 22, நரேஷ், 24, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
