/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைனான்ஸ் நிறுவன காசாளர் ஏரியில் குதித்து தற்கொலை
/
பைனான்ஸ் நிறுவன காசாளர் ஏரியில் குதித்து தற்கொலை
ADDED : நவ 12, 2025 12:24 AM
வேளச்சேரி: மாநகராட்சி ஊழியர் ரமேஷ் என்பவர், நேற்று வேளச்சேரி ஏரியில் ஆகாய தாமரை கொடிகளை அகற்றி கொண்டிருந்தார். அதில், ஒரு வாலிபரின் சடலம் சிக்கி இருந்தது.
சடலத்தை கரையில் கொண்டு சேர்த்து, சூப்பர் வைசர் வாயிலாக, வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரணையில், சாலிகிராமத்தை சேர்ந்த கண்ணப்பன், 30, என தெரிந்தது.
தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்த இவர், கடந்த 10ம் தேதி, 'என் சாவுக்கு நானே காரணம்' என, வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகி உள்ளார்.
இது குறித்து, உறவினர்கள் கே.கே., நகர் போலீசில் புகார் அளித்தனர்.
அவரை தேடி வந்த நிலையில், வேளச்சேரி ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

