/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இறந்த துாய்மை பணியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
/
இறந்த துாய்மை பணியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
ADDED : ஆக 28, 2025 12:30 AM

கண்ணகி நகர், மின்சாரம் தாக்கி பலியான துாய்மை பணியாளர் குடும்பத்திற்கு, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, 25,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
கண்ணகி நகரை சேர்ந்த துாய்மை பணியாளர் வரலட்சுமி, 30. கடந்த 23ம் தேதி அதிகாலை பணிக்கு புறப்பட்ட போது, மின்சாரம் பாய்ந்து பலியானார்.
நேற்று முன்தினம், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, வரலட்சுமியின் கணவர், குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினார். பின், 25,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மேலும், வரலட்சுமியின் யுவஸ்ரீ, 12, மனீஷ், 9, ஆகிய குழந்தைகளை, கண்ணகி நகரில் உள்ள முதல் தலைமுறை கற்றல் மையத்தில், மாலை நேர பயிற்சி வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார்.
இரண்டு குழந்தைகளுக்கும் இடையூறு ஏற்படாமல் கல்வி தொடர தேவையான உதவிகள் செய்யப்படும். நன்றாக படித்து பெரிய பதவிகளில் வர வேண்டும் என, இறையன்பு கூறினார்.