/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு ரூ.39,000 அபராதம்
/
கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு ரூ.39,000 அபராதம்
ADDED : செப் 13, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி, கோவில்பதாகைக்கு உட்பட்ட பகுதிகளில், வெள்ள பாதிப்பை தடுக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில், 21.70 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த வடிகால்வாயில் சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த 10 கடைகள் மற்றும் ஏழு வீடுகளுக்கு, நேற்று முன்தினம் 51,000 ரூபாய் அபராதம் விதித்தனர்; கழிவுநீர் இணைப்புகளையும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
இரண்டாவது நாளாக நேற்றும், வடிகால்வாயில் சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு கொடுத்த ஏழு கடை மற்றும் ஐந்து வீடுகளுக்கு, 39,000 ரூபாய் அபராதம் விதித்து, இணைப்புகளை துண்டித்தனர்.