/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாய்களின் உரிமையாளர்களுக்கு அபராதம்
/
நாய்களின் உரிமையாளர்களுக்கு அபராதம்
ADDED : டிச 16, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மாநகராட்சியில், செல்லப்பிராணிகளை பதிவு செய்வது மற்றும் 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயம் என, மாநகராட்சி அறிவித்தது. உரிமம் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினத்துடன் முகாம் நிறைவடைந்தது. நேற்று முதல் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.
அதன்படி, உரிமம் பெறா மல் இருந்த ஒரு நாய்க்கு, 5,000 ரூபாய்; அதேபோல், முக கவசம் அணியாமல், பெல்ட் அணிவித்து அழைத்து வராதது போன்ற காரணங்களால், 10 நாய்களின் உரிமையாளர் களுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

