/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷனில் மே 31 வரை விரல் ரேகை பதிவு செய்யலாம்
/
ரேஷனில் மே 31 வரை விரல் ரேகை பதிவு செய்யலாம்
ADDED : மே 16, 2025 12:18 AM
சென்னை:தமிழகத்தில், 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், 92.95 லட்சம் முன்னுரிமை, 18.45 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களில், 3.65 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவர்களுக்கான அரிசி, கோதுமையை, மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. வெளிநாடுகளுக்கு நிரந்தரமாக சென்றவர்கள், உயிரிழந்தவர்களின் பெயரை, கார்டுகளில் இருந்து குடும்பத்தினர் நீக்காமல் உள்ளனர். அதேசமயம், அவர்களுக்கு உரிய பொருட்கள் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்படுகின்றன.
எனவே, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் உண்மைத் தன்மையை சரிபார்க்குமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில், கார்டில் உள்ள உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்து, 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்படுகிறது.
இப்பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த மார்ச், 31க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்னும், 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்கள் வரும், 31ம் தேதி வரை விரல் ரேகை பதிவு செய்ய, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.