/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எர்ணாவூர் மேம்பாலத்தில் தீ விபத்து
/
எர்ணாவூர் மேம்பாலத்தில் தீ விபத்து
ADDED : மே 27, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார், திருவொற்றியூர் அருகே, எர்ணாவூர் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும், சுவரில் படர்ந்து இருந்த செடி, கொடிகள் காய்ந்து, சருகுகளாகி விட்டன
இந்நிலையில், நேற்று காலை தண்டவாளமருகே, பாலாஜி நகர் போகும் வழியில், மேம்பால பக்கவாட்டில், காய்ந்து கிடந்த சருகுகளில், திடீரென தீ பற்றி எரிந்தது. தகவலறிந்த எண்ணுார் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீ அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக, அருகேயிருந்த ரயில்வே சிக்னலில் தீ பிடிக்கவில்லை. சம்பவம் குறித்து, எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.