கமிஷனர் அலுவலகத்தில் தீ 2 கம்ப்யூட்டர் எரிந்து நாசம்
கமிஷனர் அலுவலகத்தில் தீ 2 கம்ப்யூட்டர் எரிந்து நாசம்
ADDED : ஏப் 04, 2026 05:12 AM
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 கணினிகள் எரிந்து நாசமாயின. அதில் பதிவேற்றப்பட்டிருந்த ஆவணங்களை மீட்க முடியாமல், போலீசார் தவித்து வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலவலகத்தில், நேற்று காலை 5:30 மணியளவில் தீ விபத்திற்கான அலாரம் ஒலித்து உள்ளது.
புகை எங்கு இருந்து வெளியேறுகிறது என்பதை அறியாத போலீசார், சம்பவம் குறித்து உதவி கமிஷனர் வலவன் மற்றும் வேப்பேரி தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2ம் தளத்தில் உள்ள கந்துவட்டி சீட்டு மோசடி பிரிவு அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைத்தனர்.
இந்த விபத்தில், தலா 2 கம்ப்யூட்டர்கள், மேஜை நாற்காலிகள் மற்றும் மேற்கூரை முழுதும் எரிந்து நாசமாயின.
தீ விபத்திற்கான காரணம் குறித்து, வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
கணினியில் பதிவேற்றப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை மீட்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
